நீலகிரி மாவட்டம் குன்னூர் டேன் டீ தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக 10% வழங்கப்படும் என டேன் டீ நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தங்களுக்கும் மற்ற அரசு கழகங்களுக்கு வழங்கப்படுவது போல 20% போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். 3 நாட்களாக தொடர்ந்த தொழிலாளர்களின் ஆர்பாட்டம், நேற்று 20% போனஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்ட பிறகு கைவிடபட்டது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போனஸ் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.