செங்கல்பட்டு அருகே டாஸ்மாக் மதுபான பாரில் ஊழியர்களை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மது அருந்தி விட்டு பணம் தராமல் பிரச்னை செய்ததை தட்டிக் கேட்டதால், மாம்பாக்கம் - மேடவாக்கம் சாலையில் பொன்மார் பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் பாரை சூறையாடியதோடு, ஊழியர்களையும் வெட்டிய 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.