புதுக்கோட்டை மாவட்டம் கீழத்தானியத்தில் மனநலம் குன்றிய பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கோவில் பூசாரியை காவல்துறையினர் கைது செய்தனர். மாவயல் அய்யனார் கோவிலில் ஆடைகள் கலைக்கப்பட்ட நிலையில் இருந்த மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிப் பெண்ணிடம் உறவினர்கள் விசாரித்ததில் கோவில் பூசார் முருகேசன் என்பவர் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.