திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட நிலையில் குடிநீர், கழிவறை என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோடை சீசன் தொடங்கியதால், சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வர தொடங்கினர். இதனையொட்டி கொடைக்கானலில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு பேருந்திற்கு முதல் 2 மணி நேரத்திற்கு 200 ரூபாயும், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.