தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில், தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் இன்று, மாா்ச் 4ஆம் தேதி நடைபெறுகிறது. * செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் காலை 10 மணிக்கு மேல் பிற்பகல் 3 மணிக்குள் கூட்டம் நடத்த காவல் துறையினரிடம் தவெக நிா்வாகிகள் அனுமதி கோரி, பிப்ரவரி 28ல் மனு அளித்தனா்.* தொடா்ந்து கூட்டம் நடைபெறும் இடத்தில் செய்யப்படும் அடிப்படை வசதிகள் தொடா்பாக காவல் துறையினா் கேட்ட 32 கேள்விகளுக்கு தவெக நிா்வாகிகள் பதில் அளித்ததைத் தொடா்ந்து, 52 நிபந்தனைகளுடன் செவ்வாய்க்கிழமை அனுமதி கிடைத்தது.* கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மத்திய மண்டல காவல் தலைவா் வி.பாலகிருஷ்ணன், தஞ்சாவூா் சரக காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராஜாராம் திங்கள்கிழமை இரவு ஆய்வு செய்தனா்.* தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அா்ஜூனா, மாநில நிா்வாக குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினா். Related Link உயிருக்கு உத்தரவாதம் எங்கே? - விஜய்