குமரி மாவட்டம் குன்னத்தூரில் பாசிகள் நிறைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் கிடந்த ஊற்றுவாய்க்கால் குளத்தை தமிழக வெற்றி கழக தொண்டர்கள் தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர். பக்கவாட்டு சுவர் அமைத்து குளத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.