கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மணியங்குழி பகுதியை சேர்ந்தவர் சக்கீர் உசேன் இவர் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக உள்ளார். இவருக்கு சொந்தமான 68 சென்ட் நிலத்தின் அருகே பத்து சென்ட் பொதுப்பணித்துறை நிலம் உள்ளது கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்த நிலத்தில் இவர் விவசாயம் மற்றும் ரப்பர் சீட் அடிக்கும் இயந்திரம் வைக்கும் அறை வைத்து உள்ளார். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது இந்த நிலையில் பொது பணி துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்போடு வந்து ரப்பர் சீட் அடிக்கும் அறையை இடித்து அகற்றினர். பேச்சிப்பாறை முதல் இந்த பகுதி வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் பொது பணி துறை நிலம் ஆக்கிரமிப்பு இருக்கும் நிலையில் அதிமுக பொறுப்பில் இருப்பதால் பழிவாங்கும் நோக்கில் அதிகாரிகள் அவரது நிலம் அருகே இருக்கும் புறம்போக்கு நிலத்தை மட்டும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இடித்து அகற்றியதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். Related Link இரவு நேரத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் உலா வந்த சிறுத்தை