பள்ளியை முடித்துவிட்டு, சோகத்துடன் வீடு திரும்பிய 5ஆம் வகுப்பு மாணவி. மகள் கூறியதை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர். மாணவியை கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காலை உணவுத் திட்ட ஊழியர். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஊழியருக்கு தண்டனை கிடைத்ததா? காவல் துறை எடுத்த நடவடிக்கை என்ன? ஸ்கூலுக்கு போன சிறுமி, சோகத்தோட வீட்டுக்கு வந்துருக்காங்க. மகள் சோகமா வந்தத பாத்த பெற்றோர், என்னமா ஆச்சு? டீச்சர் ஏதாவது திட்டுனாங்களான்னு கேட்டுருக்காங்க. அப்போ, சிறுமி எதுவும் பேசாம சைலண்ட்டாவே இருந்துருக்காங்க. சரி, கொஞ்ச நேரத்துல அவளே நார்மலா ஆயிடுவான்னு, பெற்றோர் அவங்க வேலைய பாத்துட்டு இருந்துருக்காங்க. இரவாகியும், சிறுமி ஸ்கூல இருந்து வந்த மாதிரியே தான் இருந்துருக்காங்க. மக இப்படி இருக்க மாட்டாளே? என்னாச்சு? தெரிலையேன்னு பக்கத்துல போய் உக்காந்து விசாரிச்சிருக்காங்க பெற்றோர். அப்போ தான், புள்ள ஏன் இப்படி சோகமா இருக்காங்குற காரணமே தெரிய வந்துருக்குது.ஸ்கூல ஒரு சத்துணவு அங்கிள் Badtouch பண்ணாருப்பா. தனியா பாத்ரூமுக்கு கூப்ட்டுட்டு போய் ட்ரெஸ்லாம் கழட்டி எதோ பண்ணாரு எனக்கு ரொம்ப வலிக்குதுனு சொல்லி அழுதுருக்காங்க சிறுமி. இத கேட்டதும், பதறிப்போன பெற்றோர், எங்கமா வலிக்குது தெளிவா சொல்லுனு கேட்டுருக்காங்க. சிறுமி சொன்னத கேட்டு அதிர்ச்சியானவங்க நேரா ஸ்கூலுக்கு போய் பயங்கர சத்தம் போட்டுருக்காங்க. என்ன சார் சொல்றீங்க? அப்படிலாம் எங்க ஸ்கூல யாரும் பசங்ககிட்ட மிஸ்பிகேவ் பண்ண மாட்டாங்க, உங்க பொண்ணு சொன்னத தப்பா புரிஞ்சிக்கிட்டுவந்து சத்தம் போடாதிங்கனு கோவப்பட்டு இருக்காங்க ஸ்கூல் மேனேஜ்மேண்ட்ல இருந்தவங்க.இது சரிபட்டு வராதுன்னு, சிறுமியோட அப்பா போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்துருக்காரு. சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் செம்பியம் பகுதியில உள்ள காமராஜர் நகர் மாநகராட்சி ஸ்கூல 5-வது படிக்குற என் மகள யாரோ பாலியல் வன்கொடுமை பண்ணிருக்காங்க சார்னு அனைத்து மகளிர் காவல் நிலையத்துல கம்ப்ளைண்ட் பண்ணிருக்காரு. புகார் அடிப்படையில, வழக்குப்பதிவு பண்ண போலீஸ்காரங்க, நேரா ஸ்கூலுக்கு போய் விசாரணை பண்ணிருக்காங்க. அப்பதான், இந்த கேடுகெட்ட வேலையில ஈடுப்பட்டது, காலை உணவு திட்ட ஊழியர் குணசேகர்னு தெரியவந்துச்சு. அதுக்குப்பிறகு, குணசேகர் மேல போக்ஸோ வழக்குப்பதிவு செஞ்ச போலீஸ், அவன அரெஸ்ட் பண்ணி கம்பி எண்ண வச்சிருக்காங்க. மாணவிகளுக்கு GOOD TOUCH எது, BAD TOUCH எதுன்னு சொல்லிக்கொடுத்து, அவங்கள நல்வழிப்படுத்தி, பாதுகாக்க வேண்டிய பள்ளியிலேயே, பாலியல் ரீதியா நடக்குறதா எழுந்திருக்குற குற்றச்சாட்டுகள் படிக்கிற பிள்ளைங்களுக்கு மட்டுமில்ல, பெத்தவங்கள் மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சிய ஏற்படுத்தியிருக்கு. இப்ப உள்ள சூழ்நிலையில, ஸ்கூல், காலேஜ், ரோடு, ஆஃபீஸ்னு எல்லா இடத்துலயுமே, பெண் பிள்ளைகளும், பெண்களும் ரொம்ப ரொம்ப எச்சரிக்கையாவும், கவனமாவும் இருக்கனும்ங்குறது தான் இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்திக்கிட்டே இருக்கு.இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | பாழடைந்த கட்டிடத்தில் ஆண் சடலம் - தூங்கா நகரை நடுங்க விட்ட கொ*ல | Crime News