திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உடலில் காயங்களுடன் கிடந்த போதை ஆசாமி ஆம்புலன்ஸில் ஏற மறுத்து அடம்பிடித்த நிலையில், அவரை மற்றொரு போதை ஆசாமி அடித்து துவைத்ததால் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேற்கு மாரம்பாடியை சேர்ந்த சேசுராஜ், குங்கும காளியம்மன் கோவில் தெருவில் போதையில் உடலில் காயங்களுடன் கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்கு அனுப்ப முயன்றனர். ஆம்புலன்ஸில் ஏற மறுத்து அடம்பிடித்தவரை, அவ்வழியாக வந்த மற்றொரு போதை ஆசாமியான சசிக்குமார் சரமாரியாக தாக்கி ஆம்புலன்ஸில் ஏற்ற முயன்றார். சசிக்குமாரிடம் இருந்து சேசுராஜை மீட்ட மக்கள், போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து சேசுராஜை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.