மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்கும் வகையில் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.அ.வல்லாளப்பட்டியில் உள்ள வெள்ளிமலையாண்டி கோயில் முன்பு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.