பேனர்கள் கிழிப்பு : ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு இன்று மாலை 5 மணி அளவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதற்காக அந்தியூர் அருகே உள்ள அத்தாணி கைகாட்டி பிரிவு, காட்டூர் மேடு, கருவல்வாடிப்புதூர்,கீழ்வாணி, ஆப்பக்கூடல் உள்ளிட்ட மெயின் ரோடுகளில் அதிமுக சார்பில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. இதில் நேற்று இரவு மர்ம நபர்கள் 20க்கும் மேற்பட்ட பிளக்ஸ் போர்டுகளை கிழித்துள்ளனர். இதனால் அந்தியூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தியூர் மற்றும் ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Related Link தி.மு.க. பேனரை அ.தி.மு.க.வினர் கிழித்ததாக குற்றச்சாட்டு