திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 5 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேரின் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது காண்போர் நெஞ்சை கரையச் செய்தது. கோவில் பின்புறம் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்து வீடுகள் புதையுண்டதில் உள்ளே சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுக்கு பிறகு பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.