கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கிடந்த பெண் சிசுவின் சடலத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழுதூரில் உள்ள தனியார் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியின் பெண்கள் விடுதி சுற்றுச்சுவரின் அருகே பிறந்து ஒரு நாளேயான பெண் குழந்தையின் சடலம் கிடப்பதாக ராமநத்தம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று பெண் சிசுவின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார், அக்குழந்தையை வீசிச் சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.