கள்ளக்குறிச்சி மாவட்டம், தாவடிப்பட்டு பகுதியில் உள்ள மணிமுத்தா ஆற்றில் தரைப்பாலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதால் மக்கள், கயிறு கட்டி ஆற்றை கடந்து வருகின்றனர். மணிமுத்தாறின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அதன் அருகிலேயே தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இதனிடையே மழையின் காரணமாக தரைப்பாலம் ஆற்றுவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் மக்கள், புதிய மேம்பாலத்திற்காக அமைக்கப்பட்ட தூண்களில் கயிற்றை கட்டி ஆற்றை கடந்து வருகின்றனர்.