தனது அக்கா குறித்து, நண்பர்கள் கூறியதை கேட்டு ஷாக் ஆன இளைஞர். வீட்டிற்கு வந்து அக்காவின் காலில் விழுந்து கெஞ்சிக் கதறிய தம்பி. அடுத்த சிலநொடிகளில் ஆடுவெட்டும் அரிவாளால் அக்காவை தம்பி வெட்டிக் கொலை செய்த பயங்கரம். அக்கா குறித்து நண்பர்கள் என்ன கூறினார்கள்? அக்காவின் காலில் விழுந்து தம்பி எதற்காக கெஞ்சினார்? அக்காவை தம்பி வெட்டிக் கொலை செய்ததற்கான காரணம் என்ன?இளம்பெண்ணின் அலறல் சத்தம்கேட்டு ஓடிய பக்கத்துவீட்டார்சாயந்தரம் 6 மணி இருக்கும். ஒரு இளம்பெண்ணோட அலறல் சத்தம் கேட்ருக்குது. அதனால, பதறுன அக்கம்பக்கத்துல உள்ள மக்கள் இளம்பெண்ணோட வீட்டுக்கதவை உடைச்சி உள்ள போய்ருக்காங்க. அப்போ, அந்த இளம்பெண்ணோட தம்பி தன் கையில இருந்த அரிவாள வீட்டுக்குள்ள வீசிட்டு ஓட்டம் பிடிச்சிருக்காரு. அந்த இளைஞரை பிடிக்க அக்கம்பக்கத்துல உள்ளவங்க முயற்சி பண்ணிருக்காங்க. அப்போ, யாரு கையிலயும் சிக்காம அந்த இளைஞர் எஸ்கேப் ஆனதால, ரத்தவெள்ளத்துல துடிதுடிச்சிட்டு இருந்த இளம்பெண்ணை மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போயிருக்காங்க. ஆனா, போறவழியிலேயே உயிரிழந்துட்டாங்க இளம்பெண். அதுக்குப்பிறகு தகவல் தெரிஞ்சி சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இளம்பெண்ணை அரிவாளால வெட்டிக் கொலை செஞ்ச இளைஞரை தேடுறவேலையில இறங்கிருக்காங்க. இதுக்குமத்தியில, கொலை நடந்த ஒரு மணிநேரத்துலயே போலீஸ் ஸ்டேஷன்ல வந்து சரணடைஞ்சிருக்காரு அந்த இளைஞர். அடுத்து, அந்த இளைஞர்கிட்ட நடத்துன விசாரணையிலதான் கொலைக்கான காரணமே தெரியவந்துருக்குது.எதிர்வீட்டு நபருடன் செல்போனில் மணிக்கணக்கில் பேசிய ராதிகாநெல்லை, தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டு வியாபாரி ராமராஜ். 56 வயசான இவருக்கு ராதிகாங்குற மகளும், கண்ணன்ங்குற மகனும் இருந்தாங்க. இதுல மகன் கண்ணன் தன்னோட தாய்கூட வேலூர்ல தங்கி இருந்து திண்பண்ட வியாபாரம் பாத்துட்டு இருந்துருக்காரு. மகள் ராதிகா மட்டும் அப்பாவோட சொந்த ஊர்ல இருந்துருக்காங்க. இதுக்குமத்தியில பொங்கல் பண்டிகையை கொண்டாடுறதுக்காக வேலூர்ல இருந்து தாயும், மகனும் கிளம்பி வந்துருக்காங்க. அந்த 3 வாரமும், ராதிகாவோட நடத்தைகள் வித்தியாசமா இருந்துருக்குது. அடிக்கடி செல்போன்ல பேசிட்டே இருந்த ராதிகாவை, கண்காணிக்க ஆரம்பிச்ச கண்ணன் யாரோட நம்பர்னு கண்டுபிடிக்கிறதுக்காக அக்காவோட சொல்போனை செக் பண்ணிருக்காரு. அப்போ, ஏற்கெனவே திருமணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்குற எதிர் வீட்டை சேர்ந்த ஒருத்தர்கிட்ட மணிக்கணக்குல பேசி இருந்ததும், வாட்ஸ்அப்ல காதல்மொழி பேசி இருந்ததும் தெரியவந்துச்சு. அதப்பாத்து ஷாக் ஆன கண்ணன், அக்காகிட்ட எதுவுமே கேக்காம வீட்டவிட்டு வெளியபோய் நண்பர்களோட இருந்துருக்காரு. கண்ணன் முகத்துல சோகத்த பார்த்த நண்பர்கள் என்னாச்சுனு விசாரிச்சிருக்காங்க. அப்போ, அக்கா போன்ல பாத்த விஷயத்தை சொல்லிருக்காரு கண்ணன். குடும்ப மானம் போவதாக காலில் விழுந்து கெஞ்சிய தம்பிஅதுக்கு, அந்த நண்பர்கள் சொன்ன விஷயம் இன்னும் இளைஞரை அதிர்ச்சியடைய வச்சிருக்கு. உன் அக்காவுக்கும், எதிர்வீட்டு நபருக்கும் தகாத உறவு இருக்குறது உண்மைதான், ஊர்ல இருக்க நிறையபேரு தப்பாதான் பேசுறாங்க, அதப்பத்தி சொன்னா நீ வருத்தப்படுவனுதான் நாங்க எதுமே சொல்லலனு, சொல்லிருக்காங்க நண்பர்கள். அதோட, பகல்நேரத்துல உங்க அப்பா ஆடு வியாபாரம் பண்றதுக்கு போயிருவாரு. அந்தநேரங்கள்ல எதிர்வீட்டு நபர் உங்க வீட்டுலயேதான் இருப்பாரு. அத, ஊர்ல உள்ளவங்க நிறையபேர் பாத்துருக்காங்கனு சொன்ன நண்பர்கள், உன் அக்காவுக்கு அட்வைஸ் பண்ணு அப்டினும் சொல்லிருக்காங்க. அதுக்குப்பிறகு வீட்டுக்குப்போன கண்ணன், எதிர்வீட்டு நபருக்கு கல்யாணமாகி ரெண்டு பிள்ளைகள் இருக்காங்க. அவரோட நீ வாழ முடியாது, அதனால அவர்கூட பேசுறதையும், பழகுறதையும் நிறுத்திருனு சொல்லிருக்காரு. அதுக்கு, யாரு என்ன சொன்னாலும் என்னால அவர மறக்க முடியாது, யாரும் என்மேல அக்கறை காட்ட வேண்டாம்னு பேசிருக்காங்க ராதிகா. அப்போ, அக்காவோட கால்ல விழுந்து கெஞ்சி கதறுன கண்ணன் குடும்ப மானமே போய்ரும், ஊர்ல யாரும் மதிக்கமாட்டாங்கனு அழுதுருக்காரு. ஆனாலும், ராதிகா அத கண்டுக்கல. போலீசில் சரணடைந்து, வாக்குமூலம் கொடுத்த இளைஞர்ஒருகட்டத்துல ஆத்திரமடைஞ்ச தம்பி, அக்காவோட கன்னத்துல பளார்னு அறை விட்ருக்காரு. மளிகை பொருட்கள் வாங்குறதுக்காக அம்மாவும், அப்பாவும் கடைக்கு போய்ருந்ததால் சண்டைய தடுக்கக்கூட யாருமே இல்ல. தம்பிக்கிட்ட அடிவாங்கின அக்கா, நான் மேஜர் யார வேணாலும் மேரேஜ் பண்ணலாம், யாரும் என்னை கேக்க முடியாதுனு லா பேசிருக்காங்க. அதனால, இன்னும் கடுப்பான கண்ணன், ஆடு வெட்டுற அரிவாள எடுத்து அக்காவோட தலையிலயும், கழுத்துலயும் வெட்டிருக்காரு. அப்போ, அலறுன இளம்பெண் அப்படியே சுருண்டு கீழே விழுந்துருக்காங்க. ராதிகாவோட சத்தங்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்துல உள்ளவங்க, உள்பக்கமா தாழ்ப்பாள் போடப்பட்ருந்த ராதிகா வீட்டுக்கதவ உடச்சி உள்ளபோய்ருக்காங்க. அவங்க உள்ள வந்ததும், பதறுன கண்ணன் அரிவாள அங்கேயே போட்டுட்டு தப்பி ஓடிருக்காரு. அடுத்த ஒரு மணிநேரத்துல தேவர்குளம் போலீஸ் ஸ்டேஷன்லபோய் சரணடைஞ்ச இளைஞர், தன் அக்காவ கொலை செஞ்சதுக்காக காரணத்தையும் வாக்குமூலமா குடுத்துருக்காரு. இதையும் பாருங்கள் - 15 நாட்களுக்கு பின் சிக்கிய கொலையாளிகள்