ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை. இரண்டு இளைஞர்கள் ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டை தொடர்ந்து நோட்டமிட்ட சிசிடிவி காட்சி. வாங்கிய கடனை அடைப்பதற்காக கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய கேடி சகோதரர்கள். யூடியூபில் வீடியோ பார்த்து கொள்ளைக்கு பிளான் போட்டதும் அம்பலம். கேடி சகோதரர்கள் போலீசில் சிக்கினார்களா? பின்னணி என்ன?சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த காவல்துறையினர்பொதுவா, வெளியூர் போறப்ப பக்கத்துல உள்ள சொந்த பந்தங்கள்கிட்ட வீட்ட பாத்துக்கோங்க, ஊருக்கு போயிட்டு வர்றேனு சொல்றது வழக்கம். அப்படிதான், தன்னோட மகன் வீட்டுக்குப்போன ஓய்வுபெற்ற பேராசிரியர் ஆல்பின் ஃபிளம்மிங், பக்கத்துல உள்ள உறவினர்கிட்ட வீட்ட பாத்துக்கோங்க, நாலு நாள்ல வந்துருவேனு சொல்லிட்டு போய்ருக்காரு. அதனால, அந்த உறவினரும் ஆல்பின் வீட்டுக்கு அடிக்கடி போய் பாத்துரு. அப்படி, போறப்ப வீட்டோட கதவுல இருந்த பூட்டு உடைக்கப்பட்ரு இருந்துருக்குது. இதப்பாத்து அதிர்ச்சியான உறவினர், உடனே ஆல்பினுக்கு போன் பண்ணி, தகவல் சொன்னதோட வீடியோ கால் பண்ணியும் காட்டிருக்காங்க. அப்போ, வீட்டுக்குள்ளபோய் பாருங்கனு சொல்லிருக்காரு ஆல்பின். அதனால, உறவினரும் உள்ளபோய் பாத்துருக்காங்க. அப்போ, பீரோவ ஒடைச்சி அதுல இருந்த 15 சவரன் நகைகளும், 3 லட்சம் ரொக்கமும் காணாம போயிருந்தது தெரியவந்துருக்குது. அதனால, ஷாக்கான ஆல்பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி கம்பளைண்ட் பண்ணிருக்காரு. அடுத்து, அங்க வந்த போலீசார் சம்பவம் நடந்த பகுதிகள்ல இருந்த அத்தனை சிசிடிவி கேமராக்களையும் அலசி ஆராஞ்சிருக்காங்க. அப்பதான், ஆக்டிவா ஸ்கூட்டர்ல வந்த ரெண்டு இளைஞர்கள் ரெண்டு நாளா தொடர்ந்து நோட்டமிடுற காட்சி இருந்துருக்குது. அடுத்து, அந்த இளைஞர்களை தேடிப்பிடிச்சி விசாரிச்சப்ப அவங்கதான் கொள்ளையடிச்சது அப்டிங்குறது தெரியவந்துருக்குது.ஆல்பின் வீட்டை தொடர்ந்து நோட்டமிட்டு வந்த சகோதரர்கள்சென்னை, மதுரவாயல் சொக்கநாதன் நகர் ரெண்டாவது தெருவை சேர்ந்தவர்தான் ஆல்பின் ஃபிளம்மிங். லயோலா காலேஜ்ல பேராசிரியரா இருந்த இவரு கடந்த சில மாசங்களுககு முன்னால ரிட்டயர்டு ஆகிட்டாரு. மகளுக்கு திருமணமாகி அவங்க வெளிநாட்டுல இருக்காங்க. அதேமாதிரி, மகனுக்கும் திருமணமாகி அவரும் கன்னியாகுமரியில இருக்காரு. அதனால, ஆல்பினும் அவரோட மனைவியும் மட்டும்தான் வீட்ல இருந்துருக்காங்க. இதுக்குமத்தியில மகனுக்கு குழந்தை பிறந்ததால கடந்த மூணு மாசத்துக்கு முன்னால தன் மனைவியை அழைச்சிக்கிட்டு கன்னியாகுமரிக்கு போய்ட்டாரு ஆல்பின். அதனால, அவரோட உறவினர்தான் ரெண்டு நாளைக்கு ஒருமுறை அடிக்கடி வீட்டுக்கு வந்து சுத்தம் பண்ணிட்டு போறது வழக்கம். இதையெல்லாம் நோட்டமிட்ருக்காங்க திருவள்ளூர் காக்கலூரை சேர்ந்த கண்ணனும் அவரோட தம்பி முகேசும்.கொள்ளையடிப்பது எப்படி என்பது குறித்து யூடியூபில் வீடியோதலைக்குமேல கடன் வாங்கி வச்சிருந்த சகோதரர்கள் கொள்ளையடிச்சி அந்த கடனை அடைச்சிட்டு நிம்மதியா இருக்கலாம்னு முடிவு பண்ணிருக்காங்க. அதுக்காகவே எப்படி கொள்ளையடிக்கலாம், அந்த கொள்ளை சம்பவத்தை எப்படி தடயமே இல்லாம பண்ணலாம்? போலீஸ்ல சிக்காம இருக்க என்ன பண்ணணும்னு எல்லா டெக்னிக்கையும் யூடியூப்ல பாத்துருக்காங்க சகோதரர்கள். அடுத்து, வசதிபடைச்சவங்க வீட்ட நோட்டமிட்ட சகோதரர்கள் கண்ணுல ஆல்பினோட வீடுதான் ஆளு இல்லாத வீடா தென்பட்ருக்குது. அதனால, நைட்டோட நைட்டு ஆக்டிவா ஸ்கூட்டர்ல வந்த அண்ணன்-தம்பி அந்த வண்டிய கொஞ்ச தூரம் தள்ளி நிறுத்தி வச்சிட்டு நடந்தேதான் வந்து ஆல்பினோட வீட்டை உடைச்சி, பீரோவுல இருந்த 15 சவரன் நகைகளையும், 3 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளையடிச்சிட்டு எஸ்கேப் ஆகிட்டாங்க. ஆனா, லாக்கர்ல இருந்த 40 சவரன் நகைகள் அவங்க கண்ணுல சிக்கல. கையில கிடைச்ச பணத்த வச்சி புது பல்சர் வாங்கின சகோதரர்கள், பல ஆடம்பர பொருட்களையும் வாங்கி ஜாலியா இருந்துருக்காங்க.கண்ணன் மற்றும் முகேஷை கைது செய்த காவல்துறையினர்இதுக்கு மத்தியில, கொள்ளையர்களோட கைரேகை பதிவுகளை ஏற்கெனவே கொள்ளையர்கள் லிஸ்ட்ல இருக்குற எல்லாரோட கைரேகைகளோட மேட்ச் பண்ணி பாத்துருக்காங்க. ஆனா, மேட்ச் ஆகல. அதுக்குப்பிறகுதான், சிசிடிவி காட்சியில ரெண்டுபேரு நோட்டமிடுறது, நைட்நேரத்துல அதே ரெண்டுபேரு நடந்துபோற காட்சிகளை பாத்து அந்த ரெண்டுபேரையும் தூக்கி விசாரிச்சிருக்காங்க. யூடியூப் பாத்து கொள்ளையடிக்க வந்த சகோதரர்களுக்கு இதுதான் முதல் கொள்ளை அப்டிங்குறதும், அதனாலதான் கைரேகை மேட்ச் ஆகலங்குறதும் தெரியவந்துருக்குது. அடுத்து, சகோதர்களை கைது செஞ்ச போலீசார் அவங்ககிட்ட இருந்து 50 கிராம் நகைகள், 25 ஆயிரம் ரொக்கம், புது பல்சர் பைக் எல்லாத்தையுமே பறிமுதல் பண்ணிருக்காங்க. Related Link அரை நிர்வாண கோலத்தில் இளம்பெண் சடலம்