விருதுநகர், பெரிய பள்ளிவாசல்... வீட்டில் மாமியார், பிள்ளைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த தாய். கதவை திறந்து உள்ளே வந்த நபர். தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது, பெட்ரோல் கலந்த மண்ணெண்ணெயை ஊற்றி, தீ வைத்து கொளுத்திய கொடூரம். அடுத்த சில மணி நேரங்களில் நடந்த பயங்கரம். தூங்கிக் கொண்டிருந்தவர்களை தீ வைத்து கொளுத்திய நபர் யார்? நடந்தது என்ன? விருதுநகர்ல உள்ள சிவகாசி, பெரிய பள்ளிவாசல் பகுதிய சேந்த முபாரக் அலி - அலி பாத்திமாவுக்கு கல்யாணமாகி ரெண்டு பசங்க இருக்காங்க. சில வருடங்களுக்கு முன்பு முபாரக் அலி, ஒரு ஆக்சிடண்ட்ல உயிரிழந்துட்டாரு.அதுக்கப்புறம் கொஞ்சம் நாட்கள் தனியா வாழ்ந்துட்டு இருந்த அலி பாத்திமா, அதே பகுதியை சேந்த அக்பர் அலி-ங்குற நபர ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அக்பர் அலி, தன்னோட மனைவி பாத்திமாவையும் அவங்களோட ரெண்டு பசங்களையும் நல்லபடியா பாத்துக்கிட்டு இருந்துருக்காரு. ஆனா, நாளடைவுல பாத்திமா நடத்தையில சந்தேகப்பட்ட கணவன், அடிக்கடி அவங்க கிட்ட சண்டை போட்டுட்டு இருந்துருக்காரு. ஒரே வீட்ல இருந்தாலும் ரெண்டு பேரும் மனக்கசப்போடயே வாழ்ந்துட்டு இருந்துருக்காங்க. கொஞ்சம் நாளைக்கு முன்னாடி வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு வந்த அக்பர் அலி, மறுபடியும் மனைவியோட நடத்தையில சந்தேகப்பட்டு அவங்கள சித்ரவதை பண்ணிருக்காரு.அப்ப மனைவியும் தன்னோட கணவன எதிர்த்து பேசுனதா கூறப்படுது. இதனால பாத்திமா மேல கோபமடைஞ்ச கணவன், மனைவிய அரிவாளால சரமாரியா வெட்டிருக்காரு. இதபாத்த அக்கம் பக்கத்துவீட்டுக்காரங்க பாத்திமாவ ஹாஸ்பிட்டல்ல அனுமதிச்சுட்டாங்க. அதுக்கப்புறம் அக்பர் அலிய அரெஸ்ட் பண்ண போலீஸ் அவர சிறையில அடைச்சுட்டாங்க.சமீபத்துல தான் அக்பர் அலி சிறையில இருந்து வெளிய வந்ததா கூறப்படுது. இதுக்கிடையில பாத்திமாவுக்கு விபத்துல உயிரிழந்த முதல் கணவரோட இன்சூரன்ஸ் பணம் 11 லட்சம் ரூபாய் வந்ததா கூறப்படுது. இத தெரிஞ்சுக்கிட்ட அக்பர் அலி, அந்த 11 லட்சம் ரூபாய் பணத்த கேட்டு தொடர்ந்து மனைவிய அடிச்சு டார்ச்சர் பண்ணிருக்காரு.கண்டிப்பா பணத்த உங்க கிட்ட கொடுக்க மாட்டேன், அந்த பணத்த என்னோட பசங்க பேருல அக்கவுண்ட்ல போட போறேன், அது எதிர்காலத்துல அவங்களுக்கு உதவும், அதனால உங்க கிட்ட நிச்சயமாக பணத்த கொடுக்க மாட்டேன்னு சொல்லிருக்காங்க.இதகேட்டு, ஆத்திரமடைஞ்ச அக்பர் அலி, உன்னையவும், உன் பசங்களையும், மாமியாரையும் வீட்ல உட்கார வச்சு சாப்பாடு போடனும், ஆனா பணம் கேட்டா தரமாட்டியான்னு சொல்லி மனைவிய போட்டு சரமாரியா அடிச்சுருக்காரு. பதிலுக்கு பாத்திமாவும் கணவன பயங்கரமா திட்டிருக்காங்க. அதுக்கப்புறம் வீட்ல இருந்த எல்லாரும் தூங்க போய்ட்டாங்க.ஆனா, மனைவி மேல கொலை வெறியில இருந்த அக்பர் அலி, நைட்டு நேரத்துல பெட்ரோல வாங்கிட்டு வந்து, அத வீட்ல இருந்த மண்ணெண்ணைய்ல கலந்து தூங்கிட்டு இருந்த எல்லாரு மேலையும் ஊத்தி தீ வச்சு கொளுத்திருக்கான். அதுமட்டும் இல்லாம தீ எதிர்பாராத விதமா அக்பர் அலி மேலையும் பட்ருக்கு.இதனால அந்த குடும்பமே வலி தாங்க முடியாம அலறி துடிச்சுருக்கு. சத்தத்த கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க 5 பேரையும் மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சாங்க. இதுல சிக்கந்தர் பீவி உயிரிழந்துட்டாங்க. பாத்திமாவோட மகளுக்கு 35 சதவீத தீக்காயங்களும், மற்ற எல்லாருக்கும் 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டிருக்குன்னு சொன்ன டாக்டர் அவங்கள தீவிர சிகிச்சை பிரிவுல வச்சு ட்ரிட்மெண்ட் கொடுத்துட்டு இருக்காங்க.