செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பொன்பதர்கூடம் கிராம காப்புக்காடு வழியாகச் செல்லும் பேருந்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்திலும் அமைச்சர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.