ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பேருந்து நிலையத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். பேருந்து நிலையத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் சென்ற மக்கள், இருளில் தவித்தனர்.