கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கல்லூரி மாணவர்கள் கோயிலுக்கு சென்று திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மாணவர்கள் காயமின்றி தப்பிய நிலையில், மின்கம்பம் உடைந்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது.