திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், டூவீலர் மீது மோதி, பழக்கடைக்குள் புகுந்து, மின் கம்பம் மீது மோதி நின்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த முகமது முதுமான், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற கார் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது விபத்து நேரிட்டது. கார் மோதிய வேகத்தில் மின்கம்பம் சாய்ந்ததில் மின் கம்பிகள் சாலையில் தொங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், மின்சாரம் நிறுத்தப்பட்டு, மின்கம்பிகளை ஊழியர்கள் துண்டித்த பிறகு போக்குவரத்து சீரானது.