செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் காரில் பெருங்களத்தூர் நோக்கி சென்ற போது திடீரென நின்றது. இதையடுத்து காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறிய நிலையில், கிருஷ்ணகுமார் காரில் இருந்து வெளியேறினார். இதையடுத்து கார் தீப்பிடித்து எரிந்ததை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.