ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே 4 இருசக்கர வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார், காரின் முன்பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்று சிக்கியதையும் பொருட்படுத்தாமல், அதனை இழுத்துக் கொண்டே சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.வேலூரில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தி, அடியில் சிக்கிய பைக்குடன் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சென்றது. பிறகு சாலையோரம் காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பிய நிலையில், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.