புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்றுள்ள மத்திய குழு, முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியது. அப்போது புயல், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு தேவைப்படும் நிதி ஆகியவை குறித்து அவர்களிடம் முதலமைச்சர் எடுத்துக் கூறினார்.