தேனி மாவட்டம் வடுகபட்டியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டியில், கோவை அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது. 35 ஆம் ஆண்டு சீதையம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான கைபந்தாட்ட போட்டியில் 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.