திருப்பனந்தாளில் சமுதாய வளைகாப்பு விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சத்தூட்ட பொருட்கள் வழங்கினார்.சமுதாய வளைகாப்பு விழாசமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாளில் 2025-26 ஆம் ஆண்டிற்கான கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா, கயிலை மாமுனிவர் சதாபிஷேக திருமண மண்டபத்தில் நடைபெற்றது.அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்புதமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். மாவட்ட திட்ட அலுவலர் சாயிராபானு, முன்னாள் எம்.பி. ராமலிங்கம், முன்னாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் கோ.க.அண்ணாதுரை, வட்டார மருத்துவ அலுவலர் சியாமளா தேவி, திருப்பனந்தாள் பேரூராட்சி பெருந்தலைவர் வனிதா ஸ்டாலின், துணைப் பெருந்தலைவர் சப்பானி உள்ளிட்ட கலந்து கொண்டனர்.100 கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசைதொடர்ந்து திருப்பனந்தாள் வட்டாரத்தில் 100 கர்ப்பிணிகளுக்கு தாம்பூலதட்டு, சட்டை துணி, Horlicks மற்றும் மங்கலப் பொருட்களான வளையல், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், காப்பரிசி, கடலைமிட்டாய், வேப்பங் காப்பு, பூமாலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பெட்டகம் மற்றும் சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்துகொண்ட கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. Related Link சுரண்டப்படும் கனிம வளங்கள்