திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டியில் மனைவியை கணவன் தூக்கிச் செல்லும் சுவாரஸ்ய போட்டி இடம்பெற்றது. மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, சந்தைப்பேட்டையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்ற நிலையில், மனையை கணவன் தூக்கும் போட்டியில் பெயின்டிங் கான்ட்ராக்டர் ரஞ்சித், வினிதா ஜோடி வெற்றிபெற்றது. தொடர்ந்து பாடலுக்கு இளம்பெண்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.