நாமக்கல்: பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளது போல இரட்டை என்ஜின் ஆட்சி அமைந்தால்தான் மாநிலத்தின் வளர்ச்சி முழுமை அடையும் என்றும், மக்களுக்காக மக்களிடமிருந்து 2026 பாஜக சட்டமன்றத் தேர்தல் அறிக்கை கருத்துக்கள் பொதுமக்களிடமிருந்து முன்னுரிமை கொடுத்து பெறப்பட்டு வருகின்றன என்றும், நாமக்கல்லில், பாஜகவின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தொடர்பான மக்களிடமிருந்து கருத்து கேட்கும் இயக்கத்தை தொடங்கி வைத்து, பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர். கே.பி. இராமலிங்கம் பேட்டி அளித்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும், பாஜக சார்பில், மக்களுக்காக மக்களிடமிருந்து 2026 பாஜகவின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தொடர்பான மக்களிடமிருந்து கருத்து கேட்கும் வாகன பிரச்சார இயக்கம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதன் முதல் நிகழ்வாக, நாமக்கலில் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே பி ராமலிங்கம், நாமக்கல் பூங்கா சாலை காந்தி சிலை அருகே, இந்த வாகன பிரச்சார இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து நாமக்கல் உழவர் சந்தை கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம், பாஜகவின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தொடர்பான மக்களிடமிருந்து கருத்து கேட்கும் படிவங்கள் வழங்கப்பட்டு அவை பொதுமக்களால் பூர்த்தி செய்யப்பட்டு அதற்குரிய பெட்டிகளில் போடப்பட்டன. முன்னதாக நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் தலைவர் டாக்டர் கே பி ராமலிங்கம், இந்த கருத்துக்கள் பெரும் இயக்கம், பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது என்றும், நாமக்கல் மாவட்டத்தில் பாஜக அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணியினர் கலந்து கொண்டு பொது மக்களிடம் கருத்துக்களை அடுத்த ஒரு வாரத்திற்குள் பெற்று தலைமைக்கு அளிப்பார்கள் என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து, நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. இராமலிங்கம், மக்களுக்காக மக்களிடமிருந்து என்ற தலைப்பில் தமிழக பாஜக தேர்தல் அறிக்கை குழு நாடு முழுவதும் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியில் இருந்து அப்பகுதி மக்களின் எண்ணங்கள் சிந்தனைகள் இவைகளை உள்ளடக்கி இருக்கக்கூடிய கோரிக்கைகளை மக்களிடமிருந்து பெறுகிறோம். பொதுவாக ஒரு கட்சி தனது தேர்தல் அறிக்கையை தயாரித்து மக்களுக்கு வழங்கும் ஆனால் பாஜகவை பொறுத்தவரை மக்களிடம் இருந்து கோரிக்கைகளை பெற்று மக்களுக்காக தேர்தல் அறிக்கையை தயாரிக்கிறோம். தேச நலனுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். தேசியமும் தெய்வீகமும் ஒன்றிணைந்த ஆன்மிக ஆட்சி ஏன் தேவை என்ற உயர்ந்த நோக்கத்தில் நாட்டு மக்களின் எண்ணத்தை பெறுகின்றோம். அந்த அடிப்படையில்தான் இரட்டை எஞ்சின் ஆட்சி முறை தேவை என்று பாஜக மூத்த தலைவர் பிரதமர் திரு. நரேந்திர மோடி, பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார். ஒரு மாநில அரசு, மத்திய அரசோடு இணக்கமாக செயல்படுகிறபோது, மத்திய அரசின் திட்டங்களையும் மாநில அரசு நிறைவேற்றுகின்ற போதுதான் மாநிலத்தின் வளர்ச்சி முழுமை அடையும். அதைத்தான் தமிழக தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை வகிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தாம் முதல்வராக இருந்தபோது, மத்திய அரசிடமிருந்து எத்தகைய திட்டங்களை பெற்றோம்?, நாமக்கல் உட்பட 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டதை ஒரு ஒப்புதல் வாக்குமூலமாக பேசி தமது கருத்தை தெரிவித்துள்ளார். மத்திய அரசோடு இணக்கமாக இருந்து ஆட்சியை நடத்தினால் எந்த மாதிரியான வளர்ச்சியை மாநிலங்கள் பெற முடியும் என்பதையும் குறிப்பிட்டார். அதைத்தான் பாஜக இன்று விரும்புகிறது. நேச நலனும் முக்கியம், அதேநேரத்தில் தமிழகத்தின் வளர்ச்சியும் முக்கியம். தேசத்தின் பாதுகாப்பு, தமிழகத்தின் வளர்ச்சியும் வலிமையும் முக்கியம் என்ற அடிப்படையில்தான் 2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுக-உடன் இணைந்து பாஜக சந்திக்கிறது என்றும் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர். கே.பி. இராமலிங்கம் பேட்டியின்போது தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பாஜக தலைவர்கள் K.P. சரவணன், M. இராஜேஷ்குமார், மாவட்ட பொது செயலாளர் பிரபு, மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், மகளிர் அணி செயலாளர் இராதிகா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.