ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி மறுத்ததை கண்டித்து வேட்பு மனு தாக்க வந்தவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மீண்டும் வரும் 17 தாக்கல் செய்ய இருப்பதாக கூறி அங்கிருந்து வெளியேறிய அவர், அதிகாரிகள் மெத்தன போக்காக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.