மயிலாடுதுறையில் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை, ஒருவருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மயிலாடுதுறை சித்தர்க்காடு வாட்டர் டேங்க் ரோட்டை சேர்ந்தவர் பிரபாவதி. இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த மாலதி என்பவருக்குமிடையே கடந்த 2014-ஆம் ஆண்டு ஏற்பட்ட வாய்த்தகராறில் உறவினர்களான மாரிமுத்து, மணிமாறன், அரவிந்த், சுசீலா ஆகியோர் பிரபாவதி மற்றும் அவரது தாய் மாலா ஆகியோரை கட்டையால் தாக்கியதில் மாலா உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு மயிலாடுதுறை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.