திமுக ஆட்சிதான் எழுத்தாளர்களுக்கு பொற்காலம் என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார். சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர் கண்மணி எழுதிய "அங்காயா வம்சம்" மற்றும் "தூக்கத்தைத் தின்றவர்கள்" நூல்களை வெளியீட்டு பேசிய அவர், எழுத்தாளர்களுக்காக பல நல்ல திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.