தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே முறைதவறிய உறவால் ஏற்பட்ட தகராறில், இளைஞரை அரிவாளால் வெட்ட முயன்ற போது, மகனை காப்பாற்ற வந்த இளைஞரின் தந்தை வெட்டுப்பட்டு உயிரிழந்தார். அள்ளூர் பகுதியை சேர்ந்த விவேக், எதிர்வீட்டில் வசித்த அருண்குமார் என்பவரின் மனைவியுடன் பழகியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் அருண்குமார் மற்றும் அவரது உறவினர் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் சேர்ந்து, விவேக்கை வெட்ட முயன்றபோது, விவேக்கின் தந்தை மூர்த்தி குறுக்கே வந்து உயிரிழந்தார். அருண்குமார், தமிழ்ச்செல்வன் ஆகியோரை கைது செய்து நடுக்காவேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.