இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த தந்தையை காரால் இடித்து கீழே தள்ளிய மகன். அடுத்த சில நொடிகளில் கல்லை தலையில் தூக்கிப் போட்டு தந்தையை மகன் கொலை செய்த கொடூரம். பட்டப்பகலில் கொலை செய்துவிட்டு மகன் அசால்ட்டாக நடந்து சென்ற அதிர்ச்சி வீடியோ. பெற்ற தந்தையை மகன் கொலை செய்தது ஏன்? வயதான தந்தை மீது மகனுக்கு எதற்காக அவ்வளவு ஆத்திரம்? * இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவர்* எதிரில் காரில் வந்து முதியவரை இடித்து தள்ளிய நபர்* தலையில் கல்லை தூக்கிப்போட்டு முதியவர் கொ*ஒரு முதியவர் பைக்ல போயிட்டு இருந்துருக்காரு. எதிர்ல கார்ல வந்த ஒருத்தரு முதியவரை காரால இடிச்சி கீழே தள்ளிருக்காரு. அதுக்குப்பிறகு கார்ல இருந்து இறங்குன அந்த நபர், முதியவர்கிட்ட கடுமையா வாக்குவாதம் பண்ணிருக்காரு. ஒருகட்டத்துல வாக்குவாதம் எல்லைமீற, பக்கத்துல கிடந்த ஒரு கல்ல தூக்கி முதியவரோட தலையில போட்ருக்காரு அந்த நபர். அதப்பாத்த அங்க இருந்த மக்கள் வீடியோ எடுத்ததோட, இப்படியெல்லாம் பண்ணாதீங்க அண்ணேனு நியாயம் கேட்ருக்காங்க. ஆனா, அந்த நியாயத்தை எல்லாம் காதுலயே வாங்காத அந்த நபர் வீட்டு சுவர்மேல ரத்தம் தெறிக்க தெறிக்க முதியவரை கொலை செஞ்ச பிறகு எந்த உறுத்தலும் இல்லாம அசால்ட்டா நடந்து போயிருக்காரு. அதுக்குப்பிறகு, அக்கம்பக்கத்துல இருந்த மக்கள் போலீசுக்கு போன் பண்ணி தகவல் சொல்லிருக்காங்க. அடுத்து, அங்க வந்த போலீசார் முதியவரோட சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்காக அனுப்பி வச்சிட்டு பொதுமக்கள்கிட்ட விசாரணை நடத்திருக்காங்க. அப்போ, உயிரிழந்த முதியவரும் கொலை செஞ்ச நபரும் அப்பா-மகன் தான் அப்டினும் அவங்களுக்குள்ள கொஞ்சநாளா ஒரு பிரச்சனை போயிட்டு இருக்குறதாகவும் சொல்லிருக்காங்க. * சொத்தை மகன் ராஜசேகருக்கு எழுதி வைத்த தந்தை * மகனிடம் சாப்பாடு செலவுக்கு பணம் கேட்ட விஸ்வநாதன்* மகன் பணம் கொடுக்காததால் சொத்தை ரத்து செய்ய கோரிக்கை* கிரயத்தை ரத்து செய்ததால் தந்தை மீது மகனுக்கு ஆத்திரம்அதுக்குப்பிறகு முதியவரோட சொந்த பந்தங்கள்கிட்ட விசாரிச்சப்ப தான் கொலைக்கான காரணமே தெரியவந்துச்சு. கோவை அன்னூர் பக்கத்துல உள்ள ஒன்னக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். 61 வயசான இவரு பல பிரைவேட் கம்பெனிகள்ல செக்யூரிட்டியா வேலை பாத்துட்டு இருந்துருக்காரு. மகளுக்கு கல்யாணம் பண்ணி வச்ச அவர் 2017ம் ஆண்டு தன்னோட வீட்டையும் 3 சென்ட் நிலத்தையும் மகன் ராஜசேகருக்கு எழுதி வச்சிருக்காரு. அதுக்குப்பிறகு செக்யூரிட்டி வேலைக்கு போக முடியாம இருந்ததால மகன்கிட்ட சாப்பாட்டு செலவுக்கு பணம் கேட்ருக்காரு. ஆனா, எப்ப கேட்டாலும் அப்பாவை திட்டுன ராஜசேகர் வேலைக்குப்போய் சாப்டுங்கனு இரக்கமில்லாம பேசிருக்காரு. ஒருகட்டத்துல மகனோட ஏச்சையும், பேச்சையும் தாங்க முடியாத விஸ்வநாதன் பத்திர பதிவு அலுவலகத்துல போய் தான் மகனுக்கு எழுதிவச்ச வீட்டையும் நிலத்தையும் ரத்து செய்யச்சொல்லிருக்காரு. விஸ்வநாதன் கேட்டபடியே கிரையத்தை ரத்து செஞ்சிருக்காங்க அதிகாரிகள். அதுக்குப்பிறகு சொத்துப் பத்திரம் அவரது பேருக்கே மாறிடுச்சு.* உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மகன் ராஜசேகர்* மாதம் ரூ.5 ஆயிரம் தந்தைக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு* நீதிமன்றம் உத்தரவிட்டும் தந்தைக்கு பணம் வழங்காத மகன்* நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த தந்தை விஸ்வநாதன்தந்தையோட செயலால அதிர்ச்சியான ராஜசேகர், உயர்நீதிமன்றத்துல வழக்கு தொடுத்துருக்காரு. அந்த வழக்கை விசாரிச்ச நீதிபதிகள், எழுதி குடுத்த சொத்து ராஜசேகருக்கு தான் சொந்தம், ஆனா அப்பாவோட செலவுக்கு மாதா மாதம் 5 ஆயிரம் ரூபாய் குடுக்கணும்னு உத்தரவிட்டுக்காங்க. இந்த தீர்ப்பு வந்து 5 வருஷமாகியும் அஞ்சு ரூபா கூட அப்பாவுக்கு ராஜசேகர் குடுக்கவே இல்லை. பணம் கேட்டு கேட்டு பாத்த விசுவநாதன், இனி மகன் ஒரு பைசாகூட தரமாட்டான்னு முடிவுக்கு வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துருக்காரு. அந்த வழக்கு, அடுத்த வாரம் விசாரணைக்கு வர இருந்துச்சு. இதனால, கடுப்பான ராஜசேகர் அப்பாக்கிட்டபோய் சண்டை போட்ருக்கான். கோர்ட், கேஸ்னு அலைஞ்சிட்டு இருக்க எனக்கு டைம் இல்ல, ஒழுங்கா வழக்க வாபஸ் வாங்குங்கனு அப்பாக்கிட்ட கேட்ருக்கான் மகன். ஆனா, வருஷம் அஞ்சு ஆகுது செலவுக்கு பைசா இல்லாம நான் எப்படி உயிர் வாழுறதுனு சொன்ன விசுவநாதன் வழக்கை வாபஸ் வாங்க மறுத்துருக்காரு.* வழக்கை வாபஸ் வாங்காத தந்தையிடம் மகன் தகராறு* பெரிய கல்லை தூக்கிப் போட்டு தந்தை கொ** குற்றவாளியான மகனை பிடித்து விசாரிக்கும் போலீசார்இதுக்கு மத்தியில தான், இரு சக்கர வாகனத்துல தெரு வழியா போயிட்டு இருந்துருக்காரு விஸ்வநாதன். எதிர்ல கார்ல வந்த மகன் ராஜசேகர் அப்பாவோட இரு சக்கர வாகனத்த இடிச்சி கீழே தள்ளிருக்கான். அதுல, கீழே விழுந்த விஸ்வநாதன்கிட்ட காலம்போன கடைசியில சும்மா இருக்க முடியாதா? கோர்ட் கேஸ்னு என்னைய அலைக்கழிக்கிறீங்கனு தகராறு செஞ்ச ராஜசேகர் அப்பாவ புடிச்சி கீழே தள்ளிருக்கான். ஆனாலும், ஆத்திரம் தீராத மகன் பக்கத்துல கிடந்த ஒரு பெரிய கல்லை அப்பாவோட தலையில தூக்கிப்போட்டு கொலை செஞ்சிருக்கான். இது சம்மந்தமா வழக்குப்பதிவு பண்ணிருக்க அன்னூர் போலீசார் ராஜசேகர கைது பண்ணி விசாரணை நடத்திட்டு இருக்காங்க. Related Link இரவில் பயங்கரம் - இரட்டைக் கொ*