கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அத்தியந்தல் கிராமத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி பூங்காவனம் நிலத்திற்கு சென்ற போது, திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய நிலையில், திருக்கோவிலூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டனர்.