கொடைக்கானலில் உறைபனி சீசன் தொடங்கியுள்ளது. வழக்கமாக டிசம்பர் முதல் வாரத்திலேயே உறைபனி சீசன் தொடங்கும் என்ற நிலையில், மழை காரணமாக இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. கீழ்பூமி, ஜிம்கானா உள்ளிட்ட பகுதிகளில் பசுமை புல்வெளிகளில் உறைபனி கொட்டி கிடப்பது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்கிறது. மேலும், சீசன் தொடங்கியதைஅடுத்து கடுங்குளிர் நிலவி வருவதால் மக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.