கோவை மாவட்டம் சூலூர் அருகே குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி தருவதாக கூறி வெற்று தாள்களை கொடுத்து ஏமாற்றிய கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சலக்கரிச்சல் பகுதியை சேர்ந்த விஜயா என்பவர் சுய உதவி குழு தலைவியான பட்டணம் பகுதியைச் சேர்ந்த சுகந்தியிடம் குறைந்த வட்டிக்கு ஆறு கோடி ரூபாய் வாங்கிதருவதாகவும் அதற்கு ஒரு சதவீதம் கமிஷன் தர வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து பாதி பணத்தை பெற்றுகொண்ட விஜயா வெற்று தாள்களை பணக்கட்டுகள் என கூறி சுகந்தியிடம் கொடுத்துள்ளார். இதனை சோதித்து பார்த்த சுகந்தி போலீசில் புகார் அளித்த நிலையில் பணமென கூறி வெற்றுதாள்களை கொண்டுவந்த வீரமணியை கைது செய்த போலீசார் விஜயாவை தேடி வருகின்றனர்.