சென்னை போருர் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை ஓட ஓட வெட்டிய கும்பல், சாலையில் சென்ற மற்றொரு இளைஞரையும் தாக்கி விட்டு, நிறுத்தி வைக்கப்பட்டடிருந்த வாகனங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குள்ளான தமிழ் என்ற இளைஞருக்கும் காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சில நபர்களுக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.