திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றிய காதலனை கைது செய்ய வலியுறுத்தி, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு காதலி தர்ணாவில் ஈடுபட்டார். கல்பட்டு பகுதியை சேர்ந்த 34 வயதான பெண்ணும், தெளி கிராமத்தை சேர்ந்த ஆண்ட்ரோ ஜெயக்குமாரும் காதலித்து வந்த நிலையில், ஆண்ட்ரோ வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.