மதுரையில் திடீரென பழுதாகி நடுவழியில் நின்ற அரசு பேருந்தை, பயணிகள் தள்ளி செல்லும் அவல நிலை ஏற்பட்டது. திருவாதவூர் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, கே.கே.நகர் வளைவு அருகே திடீரென நின்றது. இதனையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி, நடிகர் வடிவேல் காமெடி பாணியில் பேருந்தை தள்ளி சென்றனர்.