விருதுநகர் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலரிடம் இருந்து உரிமம் பெறாத கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் வழிப்பறி நடைபெற்ற நிலையில், சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீஸார் பிடித்து விசாரித்தபோது, ஆயுதப்படை காவலர் கூமாபட்டியை சேர்ந்த தனுஷ்கோடி என்பது தெரியவந்தது.