தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் எஸ்பி, சாதிப் பாகுபாடு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி மாணவன் தேவேந்திரன் மீது சாதிய வன்மத்துடன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், போலீஸ் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றனர்.