கோவை கருமத்தம்பட்டியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறி உரிமையாளர்கள் மீது கைது நடவடிக்கை என பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது. கருமத்தம்பட்டி விசைத்தறி உரிமையாளர்கள் 5ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காடா துணியில் கையெழுத்து பெறும் இயக்கத்தை தொடங்கிய நிலையில், அவர்களை நள்ளிரவில் போலீசார் கைது செய்ய இருப்பதாக வதந்தி பரவியதை அடுத்து, போராட்ட பந்தலை சுற்றி இருசக்கர வாகனங்களை நிறுத்தி தடுப்புகளை அமைத்தனர். இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு ஆம்புலன்ஸுடன் வந்த போலீசார், மருத்துவர்கள் உதவியுடன் அவர்களை பரிசோதித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட இருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.