விசிகவிற்கு எதிராக அவதூறு பரப்பி வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. அலுவலத்தில் விசிகவினர் புகார் அளித்தனர். திருமால்பூரில் இருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த விவகாரத்தில், விசிகவினருக்கு தொடர்பு இருப்பதாக பாமக தவறான கருத்துகளை பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.