பல கோடி ரூபாய் மோசடி செய்த எல்பின் நிறுவனத்தின் முக்கிய ஏஜெண்ட்டை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு பல மாவட்டங்களில் செயல்பட்டு வந்த எல்பின் நிறுவனம், பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தது. இது குறித்து திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எல்பின் நிறுவனத்தின் நிறுவனர், முக்கிய ஏஜென்டுகளை ஏற்கனவே கைது செய்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் முக்கிய ஏஜெண்டாக செயல்பட்டு வந்த தொட்டியத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.