தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று காணாமல் போன ஐந்தாம் வகுப்பு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். சிறுவனை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் பக்கத்து வீட்டு மாடியிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளான். சிறுவனின் கழுத்தில் இருந்த செயின் மற்றும் கையில் அணிந்திருந்த மோதிரம் உள்ளிட்டவை மாயமான நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.