நண்பர்களுடன் சேர்ந்து குடித்து கொண்டிருந்த பிரபல ரவுடி. கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ரவுடியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மர்மகும்பல். இருசக்கர வாகனங்களில் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கொலை செய்த பயங்கரம். சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்து ஒரு மாதமே ஆகும் நிலையில் ரவுடியை வெட்டிக் கொலை செய்த கும்பல் யார்? கொலைகார கும்பலுக்கும், உயிரிழந்த ரவுடிக்கும் என்ன முன்விரோதம்? கொலையாளிகள் சிக்கினார்களா? நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்நைட்டு 10 மணிக்கு, கறிக்கடை சந்துல உக்காந்து சில இளைஞர்கள் மது குடிச்சிட்டு இருந்துருக்காங்க. அப்போ, அங்க வந்த பத்துக்கும் மேற்பட்ட மர்மகும்பல் மது குடிச்சிட்டு இருந்த இளைஞர்கள்ல ஒரு இளைஞரை மட்டும் குறிவச்சி கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால சரமாரியா வெட்டிக் கொலை செஞ்சிட்டு அங்க இருந்து எஸ்கேப் ஆகிட்டாங்க. கொலைகார கும்பலோட எண்ணிக்கை அதிகமா இருந்ததோட, அவங்ககிட்ட ஆயுதங்களும் இருந்ததால கூட இருந்த நண்பர்களால எதுவுமே செய்ய முடியல. அடுத்து, அரக்க பறக்க போலீசுக்கு போன் பண்ணி தகவல் சொல்லிருக்காங்க அந்த இளைஞர்கள். அதுக்குப்பிறகு அங்க வந்த போலீசார், சடலத்தை மீட்டு போஸ்ட் மார்டத்துக்காக ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சிட்டு, உயிரிழந்த இளைஞரோட நண்பர்கள்கிட்ட விசாரணையில இறங்கிருக்காங்க. அப்போ, சிறையில இருந்து தன்னோட நண்பன் ஜாமின்ல வெளிய வந்து ஒரு மாசந்தான் ஆகுறதாகவும், கொலை செஞ்ச கும்பல் கருவடிக்குப்பத்தை சேர்ந்தவங்கமாதிரி இருக்குறதாகவும் சொல்லிருக்காங்க. அதோட, அந்த கருவடிகுப்பம் இளைஞர்களுக்கும், கொலை செய்யப்பட்ட இளைஞர்களுக்கும் என்ன பிரச்சனை அப்டிங்குறதையும் சொல்லிருக்காங்க..துக்க வீட்டில் ஒரு கும்பலுடன் இளைஞருக்கு தகராறு விழுப்புரம், கோட்டகுப்பத்தை அடுத்த சின்ன கோட்டகுப்பம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் 24 வயசான அப்பு என்ற ஜவஹர். இவர் மேல மூணு கொலை வழக்கு, அடிதடி, கஞ்சா விற்பனைனு பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்குது. இதுக்கு மத்தியில, கடந்த சில மாசங்களுக்கு முன்னால ஒரு இறப்பு வீட்ல டான்ஸ் ஆடுன அப்புவுக்கும் கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஹேமநாத் கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ருக்குது. யார் ஏரியாவுல வந்து யார் டான்ஸ் ஆடுறது? இறப்பு வீட்டுக்கு வந்தோமா போனோமானு இருக்கணும்னு கருவடிகுப்பம் இளைஞர்களை மிரட்டுன அப்பு அவங்கமேல கை வச்சிருக்காரு. அப்போ, இருதரப்பு இளைஞர்களும் மாறி மாறி அடிச்சி உருண்டு இறப்பு வீட்டையே கலவரப் பகுதியா மாத்திருக்காங்க. அங்க இருந்த சொந்தபந்தங்கள் ரெண்டுதரப்பு இளைஞர்களையும் அங்க இருந்து அனுப்பி வச்சாலும், கருவடிக்குப்பம் இளைஞர்களோட ஆத்திரம் ஆறவே இல்லை. அதனால, அப்புவ பழிவாங்கியே ஆகணும்னு திட்டம் போட்ருந்துருக்காங்க. அந்த திட்டப்படி மூணுமுறை அப்புவை அந்த கும்பல் ஆயுதங்களால கொல்ல முயற்சி பண்ணிருக்காங்க. ஆனா, அந்த தாக்குதல்ல இருந்து ஒவ்வொரு முறையும் நூலிழையில தப்பிச்சிருக்காரு அப்பு. உஷாராக இருக்குமாறு அப்புவுக்கு நண்பர்கள் வார்னிங்இதுக்குமத்தியில, கடந்த ஆண்டு அக்டோபர் மாசம் புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையில உள்ள ஒரு பேக்கரியை உடைச்ச வழக்குல அப்புவை கைது பண்ண போயிருக்காங்க போலீசார். அப்போ தப்பி ஓடி வலதுகைய ஒடச்சிக்கிட்ட அப்புவை கைது செஞ்ச முத்தியால்பேட்டை போலீசார் காலாப்பட்டு சிறையில அடைச்சிருக்காங்க. அதனால, தங்களோட திட்டத்த உடனே நிறைவேற்ற முடியலயேனு வருத்தப்பட்ட கருவடிக்குப்பம் டீம், அப்பு சிறையில இருந்து வர்ற நாளை எதிர்பாத்து காத்துட்டு இருந்துருக்காங்க. அவங்க எதிர்பாத்த மாதிரியே ஒரு மாசத்துக்கு முன்னால ஜாமின்ல வெளிய வந்துருக்காரு அப்பு. அத தெரிஞ்சிக்கிட்ட கருவடிக்குப்பம் ஹேமநாத் டீம், அப்பு வெளிய போற இடங்களை எல்லாம் கண்ணுல விளக்கெண்ணெய் விட்டு கண்காணிச்சிருச்சிருக்காங்க. அத கவனிச்ச அப்புவோட நண்பர்கள் கொஞ்சம் உஷாரா இருனு சொன்னதோட தேவையில்லாம வெளிய வர வேண்டாம்னும் எச்சரிச்சிருக்காங்க. ஆனா, அதுக்கெல்லாம் அசராத அப்பு யாரு யாரோட உசுர எடுக்குறது, என் உசுர எடுக்குறதுக்கு ஒருத்தன் பொறந்து வரணும்னு டயலாக் பேசுனதோட அந்த நண்பர்களை மது குடிக்க கூப்ட்ருக்காரு.கருவடிகுப்பம் கும்பலை தீவிரமாக தேடிவரும் போலீசார்நைட்நேரம் யாரும் வரமாட்டாங்க, பகல்லதான் பகையாளிகள் ரவுண்டு கட்டுவாங்கனு நினைச்ச அப்புவோட நண்பர்களான கோட்டைமேடு பாலகணேஷ், சின்ன முதலியார்சாவடி சின்ன பிள்ளைனு சில இளைஞர்கள் மது குடிக்க போய்ருக்காங்க. சின்ன கோட்டக்குப்பம் கறிக்கடை சந்து அமைதி நகர்ல உக்காந்து மது குடிச்சிட்டு இருந்துருக்காங்க. எதிராளியோட கதைய முடிக்கிறதுனு முடிவு பண்ணிட்டா நேரங்காலம் எதுவுமே இல்லனு முன்கூட்டியே ஸ்கெட்ச் போட்டு வச்சிருந்த ஹேமநாத் டீமை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் அஞ்சு பைக்குகள்ல அங்க வந்துருக்காங்க. கையில ஆயுதங்களோட இருந்த அந்த கும்பல் அப்புவ சுத்தி வளைச்சி வெட்டி கொன்னு போட்ருக்காங்க. கூட இருந்த நண்பர்களால அப்புவை காப்பாத்த முடியல. அடுத்து அங்க வந்த போலீசார், நண்பர்கள்கிட்ட விசாரிச்சிங்க்காங்க. கருவடிக்குப்பம் ஹேமநாத் டீமோட வேலைனு அந்த நண்பர்கள் சொன்னதால அந்த டீமை பிடிக்கிற வேலையில இறங்கிருக்காங்க போலீசார். அதேநேரம், ஏற்கெனவே அப்பு மேல 3 கொலை வழக்கு, அடிதடி நிறைய வழக்கு இருக்குறதால அதுல தொடர்புடையவர்கள் யாராவது இந்த சம்பவத்தை செஞ்சிருக்காங்களா அப்டிங்குற கோணத்துலயும் விசாரணை போய்ட்டு இருக்குது. Related Link அரசு கல்லூரியில் கூட்டு பாலியல் வன்கொடுமை