ஃபெஞ்சல் புயல் கடலூர் மாவட்டத்தை புரட்டிப்போட்ட நிலையில், தற்போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மெதுவாக திரும்பி வருகிறது. குறிஞ்சி நகர், குமரப்பன் நகர், வி.எஸ்.எல். உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர் படிப்படியாக வடிந்து வரும் நிலையில், பொதுமக்கள் வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள கழுகு பார்வை காட்சி வெளியாகி உள்ளது.