மதுரை, ஆனையூரில், ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர். வீட்டிற்குள் சென்றதும் அரண்டு போய் நின்ற உறவினர்கள். முதியவரை கீழே தள்ளி தனது கணவருடன் சேர்ந்து கொலை செய்த வளர்ப்பு மகள். சிசிடிவி காட்சியை வைத்து கொலையாளிகளை அலேக்காக தூக்கிய காவல்துறையினர். மகள் போல் பார்த்து கொண்டவரை கொலை செய்ததற்கு என்ன காரணம்? நடந்தது என்ன?அதிகாலை நேரம். வீட்டு பக்கத்துல உள்ள இன்னொரு வீட்டுல தனியா இருக்குற அப்பா, இன்னும் எழுந்துருச்சு வரலையேன்னு மகள் பத்மினி வீட்டுக்கு போய் பாத்திருக்காங்க. ஆனா, அங்க தன்னோட அப்பா பழனிசாமி, இறந்து கிடந்தத பாத்து ஒருநிமிஷம் கதிகலங்கிப் போய் நின்னுருக்காங்க. காலாங்காத்தால் பத்மினி, கத்தி கூச்சல் போட்டதும் அக்கம் பக்கத்துல இருந்து எல்லாரும் பதறியடிச்சு ஓடி வந்திருக்காங்க. அடுத்த கொஞ்ச நேரத்துல சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், என்ன நடந்துச்சு, ஏது நடந்துச்சுன்னு விசாரணைய ஸ்டார்ட் பண்ணாங்க. முதியவர் தனியா இருக்குறது நல்லா தெரிஞ்ச யாரோதான் வீட்டுக்குள்ள புகுந்து கைவரிசை காட்டிருக்காங்கன்னு நினச்ச போலீஸ், பல்வேறு கோணங்கள்ள விசாரணைய தீவிரப்படுத்துனாங்க. அதனால, அக்கம்பக்கத்துல உள்ளவங்க, தெருவுல உள்ளவங்கன்னு எல்லாரையும் விசாரணை வளையத்துக்குள்ள கொண்டு வந்தாங்க காவல்துறையினர். இதுக்கு இடையில, போலீஸுக்கு ஒரு சிசிடிவி காட்சி சிக்கிருக்கு. அந்த சிசிடிவி காட்சில, ராத்திரி 11 மணிக்கு ஒரு இளம்பெண்ணும், ஆணும் பழனிசாமி வீட்டுக்கு வந்ததும், கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், விறுவிறுன்னு பைக்க எடுத்துட்டு கிளம்பி போனதும் பதிவாகிருந்துச்சு. அந்த சிசிடிவி காட்சிய கைப்பற்றுன போலீஸ், பழனிசாமியோட மகள்கிட்ட காட்டியிருக்காங்க. அப்போ தான், சிசிடிவி காட்சில பதிவாகியிருந்தது பழனிசாமியோட வளர்ப்பு மகள் சித்ராதேவின்னு தெரியவந்துருக்கு. ராத்திரி வளர்ப்பு மகள் சித்ராதேவி வீட்டுக்கு வந்துட்டு போயிருக்காங்க. அதுக்கப்புறம் பழனிசாமி வீட்டுக்கு யாருமே வரல.அதனால, சித்ராதேவி வீட்டுக்கு போய் விசாரணை பண்ணாங்க போலீஸ். அதுலதான், பழனிசாமிக்கு என்ன நடந்துச்சு அப்டிங்குற விஷயமே தெரியவந்துச்சு. அதுக்குப்பிறகு, விசாரணைய வேற கோணத்துல கையாள ஆரம்பிச்சதுல பல திடுக்கிடும் தகவல்களாம் வெளிச்சத்துக்கு வந்துச்சு. மதுரை ஆனையூர்ல உள்ள TNHB காலனி நகர சேர்ந்த பழனிசாமியோட முதல் மனைவி விஜயா பல வருஷங்களுக்கு முன்னாடியே உடல்நலக்குறைவால உயிரிழந்துட்டாங்க. இந்த தம்பதிக்கு ராஜ்குமார்-ங்குற ஒரு மகன் இருந்தாரு. அவரும் தாய் இறந்த சில மாதங்களுக்கு முன்னாடியே ஒரு ஆகிசிடெண்ட்ல சிக்கி உயிரிழந்துட்டாரு. அதுக்குப்பிறகு, தனியா வாழ்ந்துட்டு வந்த பழனிசாமி, ஆதரவு இல்லாம இருந்த சித்ராதேவிய எடுத்து வளத்துருக்காரு. இதுக்கு இடையில, ஜோதி-ங்குற பெண்ண பழனிசாமி ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டாரு. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருக்காங்க. மூத்த மகள்தான் பத்மினி. ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், தன்னோட மகள பாத்துக்குற மாதிரிதா சித்ராதேவிய கவனிச்சிட்டு இருந்தாரு பழனிசாமி. ஆனா, மனைவி ஜோதிக்கு, சித்ராதேவிய பிடிக்கலன்னு சொல்லப்படுது. அதனால, சித்ராதேவிய தன்னோட கணவர் பழனிசாமிக்கிட்ட பேசவிடாம தடுத்துருக்காங்க. இது சம்பந்தமாவே சித்ராதேவிக்கும், ஜோதிக்கும் இடையில அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கு. வயசுல பெரியவங்கன்னு பாக்காம சித்ராதேவி, ஜோதிய தகாத வார்த்தைகளால பேசுனதால, பழனிசாமியும், சித்ராதேவிய கண்டிச்சிருக்காரு. இது, சித்ராதேவிக்கு உச்சக்கட்ட ஆத்திரத்த ஏற்படுத்திருக்கு. அதனால, சம்பவத்தன்னைக்கு நைட்டு 11 மணிக்கு தன்னோட கணவர் சரத்குமார், ஃபிரண்ட் விஜயகுமாரையும் கூப்பிட்டுக்கிட்டு தந்தை பழனிசாமி வீட்டுக்கு போயிருக்காங்க சித்ராதேவி. அப்படி அங்க போன சித்ராதேவி, ஜோதி முக்கியமா நான் முக்கியமான்னு கேட்டு தகராறு பண்ணிருக்காங்க. அதுக்கு, பழனிசாமியும் என்னோட குடும்பம்தான் முக்கியம்னு சொல்ல ரெண்டு பேத்துக்கும் இடையில பயங்கரமா வாக்குவாதம் ஆகிருக்குது. ஒருகட்டத்துல, வயசானவர்னுகூட பாக்காம பழனிசாமிய, சித்ராதேவி தள்ளிவிட்டுருக்காங்க. வேகமா தள்ளிவிட்டதுல, பழனிசாமிக்கு கீழ விழுந்து தலை பகுதில பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிருக்குது. வலியால துடிதுடிச்சவரு கொஞ்ச நேரத்துலேயே உயிரிழந்துட்டாரு. பழனிசாமி உயிரிழந்தத உறுதியானதும், சித்ராதேவியும், அவங்களோட கணவன் சரத்குமாரும் பீரோவுல இருந்த பணத்தையும், பழனிசாமியோட செல்போனையும் திருடிட்டு அங்க இருந்து எஸ்கேப் ஆகிருக்காங்க. விசாரணையில, மொத்த உண்மையும் வெளிய வரவே, கொலையாளிகள் சித்ராதேவி, சரத்குமார், விஜயகுமார் மூணு பேரையும் அரெஸ்ட் பண்ணி கம்பி எண்ண வச்சிருக்காங்க... இதையும் பாருங்கள் - அண்ணன் கொ*லக்கு பழிக்குப் பழி, SPY வேலை பார்த்த டீ மாஸ்டர் | CrimeNews | CrimeUpdate