ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடி பெரிய ஏரி நிரம்பி உபரி நீர் அருவி போல ஆர்ப்பரித்து கொட்டி வருவதை அப்பகுதி மக்கள் குடும்ப குடும்பமாக சென்று கண்டு ரசித்து வருகின்றனர். மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான மகேந்திரவாடி பெரிய ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி கடைவாசல் வழியாக உபரி நீர் வெளியேறி வருகிறது. கடல் போல் காட்சியளிக்கும் ஏரியின் தரைப்பாலத்தில் அருவி போல் தண்ணீர் கொட்டும் நிலையில் தற்போது அப்பகுதி சுற்று வட்டார பகுதி மக்களின் மினி சுற்றுலாத்தலமாக மாறி உள்ளது. குழந்தைகள் ஏரி நீரில் நீச்சல் அடித்தும், விளையாடியும், மீன்பிடித்தும் மகிழ்ந்தனர்.