திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த சொக்கநாதப்பட்டியில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் நீர்தேக்க தொட்டியை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.